சமூகம்சினிமா

வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வாரிசு படக்குழு!

வாரிசு படக்குழு

இயக்குனர் வம்சி இயக்கி, விஜய் நடித்து கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. தயாரிப்பளார் தில்ராஜூ தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் வெளியான முதல் வாரத்தில் ரூ. 210 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஜய் தனது 67-வது படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts