‘கர்ப்பமாயிருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிடணும் அப்போ தான் குழந்தை கலரா பொறக்கும்’ அப்படினு பெரியவங்க சொல்லுவாங்க. இத நம்பி எல்லாரும் குங்குமப்பூ சாப்பிடுவாங்க.
உண்மையிலேயே குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலரா பொறக்குமா? நிஜமா குங்குமப்பூ ஏன் சாப்பிடணும்? தெரிந்துக்கொள்வோம் வாங்க…

கர்ப்பமாயிருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவது ரொம்ப நல்லது. எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் ஒரு தாய்க்கு கர்ப்ப காலம் என்பது வாழ்வில் மிக முக்கியமான தருணமாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு.
நீங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறியும்போது, முதலில் நினைவுக்கு வருவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும், உங்களுக்குள் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் தான். ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியமாகும். இருப்பினும், இவற்றுக்கு மத்தியில், கர்ப்பம் தறித்திருக்கம் ஒன்பது மாதங்களில் குங்குமப்பூ பரிந்துரைக்கப்படுகிறது.
குங்குமப்பூ அல்லது கேசர் என்பது குரோக்கஸ் சாடிவஸின் பூக்களிலிருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக பல ஆயுர்வேத சமையல் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கும். இது ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

மூட்ஸ்விங்ஸை சமாளிக்கிறது
கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை மூட் ஸ்விங்ஸ் ஆகும். ஹார்மோன் மாற்றங்கள் அல்லது கர்ப்பம் தறித்ததால் ஏற்படும் உடல் அசௌகரியங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மூட் ஸ்விங்ஸ் வருகிறது.
குங்குமப்பூ மூட்ஸ்விங்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது. குங்குமப்பூ உட்கொள்ளும்போது செரோடோனனின் சுரப்பதால், உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல மனநிலையை தருகிறது. மேலும் உற்சாகமாக இருக்க உதவுகிறது.
நல்ல உறக்கம்
கர்ப்ப காலத்தின் போது நீங்கள் உணரும் அனைத்து உடல் மாற்றங்களும் நேரடியாக உறக்கத்தை பாதிக்கும். உறக்கம் பாதித்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். இரவு நேரத்தில் சூடான குங்குமப்பூ பால் குடிப்பதால் பதட்டம் தணிந்து, மனநிலை மாற்றம் ஏற்படும். எனவே, குங்குமப்பூ சேர்த்துக் கொள்வதால் நன்கு தூக்கம் வரும்.
கிராம்ப்ஸ் நீக்க உதவும்
கர்ப்ப காலத்தின் போது தாய்க்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அடிக்கடி கிராம்ப்ஸ் ஏற்படும். சில சமயங்களில் வரும் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் கடுமையானதாகவும் சகிக்க முடியாததாகவும் இருக்கும். குங்குமப்பூ வலியைப் போக்க வலி நிவாரணியாக செயல்படுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
பொதுவாக கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இரத்த அழுத்த அளவு பாதிக்கப்படுகிறது.
குங்குமப்பூவை சிறிதளவு எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தத்தை அது கணிசமாகக் குறைக்கிறது.
இதய செயல்பாட்டை அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனைத்து துரித உணவுகளும் உங்கள் கலோரி உட்கொள்ளலை நிச்சயமாக அதிகரிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குங்குமப்பூ கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால், குழந்தையின் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. குங்குமப்பூவில் உள்ள பொருட்கள் ஆர்டரிஸில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
அலர்ஜிகளை தடுக்கிறது
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒவ்வாமை மற்றும் தொற்றுகள் கண்டிப்பாக ஏற்படும். பருவகால ஒவ்வாமை, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு குங்குமப்பூ உதவுகிறது. இந்த குங்குமப்பூ உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து தேவையற்ற நோய்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும் என்பது உறுதி.

