அறிவியல்இந்தியா

கருவுக்குள் கரு; பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு !

பிறந்து 40 நாளே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்த  கருவை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவர்கள் அதிர்ச்சி

பீகாரில் மோட்டிகாரி பகுதியில் உள்ள ரஹ்மானியா மருத்துவமனைக்கு பிறந்து 40 நாளே ஆன குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். குழந்தையின் வயிற்றில் வீக்கம் காணப்படுவதாகவும் இதனால், அந்த குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் தப்ரீஷ் ஆசிஷ் அதன் வயிற்று பகுதியில் காணப்படும் வீக்கத்தை கண்டறிய பரிசோதனை மேற்கொண்டார். இதனால், குழந்தைக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து வருவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

baby photo

அரியவகை நிகழ்வு

இது குறித்து விளக்கமளித்த மருத்துவர் தப்ரீஷ் ஆசிஷ் ‘இது இயற்கையில் நடக்கின்ற ஒரு அரியவகை நிகழ்வு. இது, கருவுக்குள் கரு என அழைக்கப்படும். இத்தகைய கருவுக்குள் கரு 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நடைபெறும்’ என கூறியிருக்கிறார்.

கருமுட்டைகள் தோற்றம்

பெண்குழந்தைகள் பிறக்கும்போதே கருமுட்டை செல்கள் தோன்றும் எனவும், புதியதாக எந்த செல்லும் உருவாவதில்லை என அறிவியல் நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது அதன் ஆரம்ப வளர்ச்சியில் கிட்டத்தட்ட 6 மில்லியன் கருமுட்டைகள் உருவாகின்றன. அதன் பின் குழந்தை பிறக்கும்போது ஒன்றிலிருந்து இரண்டு மில்லியனாக கருமுட்டைகள் குறைகின்றன. ஒரு பெண் குழந்தை பருவம் அடைவதற்கு முன்னாள் ஒவ்வொரு மாதமும் 10,000 முட்டைகள் இறந்துவிடுகிறது.

அரிதாக காணப்படும்

பரிசோதனை முடிவை அடுத்து, குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குழந்தையை வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வாறு, கருவுக்குள் கரு இருக்கும் அதிசயம் உலகில் மிக அரிதாகவே காணப்படும். 5 ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங்கிலும் 2019 ஆம் ஆண்டு இஸ்ரேலிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related posts