சமூகம்சினிமா

விமான நிலையத்தில் ஹிந்தி கட்டாயமா – நடிகர் சித்தார்த் பரபரப்பு பதிவு!

குற்றச்சாட்டு

2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் உடைமைகள் சோதனையின் போது தனது பெற்றோரை, சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தி மொழியில் பேச கட்டாயப்படுத்தியதாகவும்.

மேலும், தனது வயதான பெற்றோரை இருபது நிமிடங்கள் காத்திருக்க வைத்ததாகவும் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts