சினிமாதமிழ்நாடுபயணம்

தென்காசியில் நடிகர் அஜித் : வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் நடிகர் அஜித் வடகிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் தென்காசி மாவட்டம் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் அஜித் தனது மோட்டார் பைக் மூலமாக சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts