சினிமாவெள்ளித்திரை

பிரபல நடிகருடன் இணையும் கமல்ஹாசன்!

பிரபல நடிகர்

மலையாளத்தில் பிரபல நடிகரான மோகன்லால் அண்மையில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லிஜோ ஜோஸ் இப்படத்தில் நடித்து வருகிறார். இதன் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts