அரசியல்இந்தியாதமிழ்நாடு

மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் – ஆணைய தலைவர் திட்டவட்டம் !

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

காவேரி நீர்மேலாண்மை தலைவர் எஸ். கே. ஹல்தர்

தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவேரி நீர்மேலாண்மை தலைவர் எஸ். கே. ஹல்தர் மற்றும் ஒழுங்காற்று தலைவர் நவீன்குமார் தலைமையிலான குழு நேற்று ஆய்வு செய்தனர். இவர்களுடன் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வு குழுவினர் கல்லணையில் நுழையும்போது, கருப்புக்கொடி காட்டிய, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

kallanai

தமிழ்நாடு அரசு விளக்கம்

அதைத்தொடர்ந்து ஆணையத் தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மேகதாது அணை தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்து அதிகாரமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது. எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தவறான கருத்து. மேகதாது குறித்து விவாதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லும் தமிழ்நாடு அரசு தான் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

kaveri - committee - protest

23ம் தேதி ஆணைய கூட்டம்

வருகிற, 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை, யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. தமிழ்நாட்டில் காவிரி பாயும் பகுதிகள் எங்களின் அதிகார வரம்புக்குள் உள்ளது. அந்த பகுதிகளில் நாங்கள் ஆய்வு செய்தோம். மேகதாது அணை விவகாரம் குறித்து சொலிசிடர் ஜெனரலிடமிருந்து சட்டரீதியான ஆலோசனை கேட்டு பெற்றுள்ளோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம்’ என்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு மாதாந்திர நீர் தரப்படுகிறதா?” என்கிற கேள்விக்கு, “மழைப்பொழிவின் அடிப்படையில் தான் மாதாந்திர நீர் பங்கீடு தீர்மானிக்கப்படுகிறது” என்று பதிலளித்தார்.

விவசாய சங்கம் மனு

ஆணைய தலைவர் ஹல்தரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் ஜீவன்குமார் விசுவநாதன் ஆகியோர் நேரில் மனு அளித்தனர். ‘மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டாம் ‘ என்றும் கேட்டுக்கொண்டனர்.
அவர்களிடம் ‘மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம். அதை விவாதிக்க கூடாது என்று யாரும் சொல்ல கூடாது’ என்று விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஹல்தர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

farmers protest

Related posts