அரசியல்

அமைச்சர் பொறுப்புக்கு முற்றுபுள்ளி வைத்த உதயநிதி!

நான் அமைச்சராக பொறுபேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம். எந்த சுழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தலைமைக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளைஞர் அணி செயலாளர்

சினிமாதுறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட உதயநிதி அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மேடைகளில் தலைக்காட்ட தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் பலரும் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

உதயநிதி ஸ்டாலினின் PTP

உதயநிதி பேட்டி

மேலும், உதயநிதி இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தால் தான் இளைஞர்கள் கட்சியில் சேருவார்கள் என்று கூறியதால் ஸ்டாலின் இந்த பொறுப்பை உதயநிதிக்கு அளித்தார். இதை உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அமைச்சர் பதவி

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுபினராக பதவி வகித்து வருகிறார். தனது தொகுதிக்கு செல்வது, படங்களில் நடிப்பது என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனிடையே கடந்த ஆண்டு முதலே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற குரல் திமுகவில் எழ தொடங்கிவிட்டது.

: அமைச்சர் பொன்முடி PTP

அமைச்சர் பொன்முடி

கடந்த வாரம் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், மத்திய மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்தொடர்ச்சியாக பேசிய அமைச்சர் பொன்முடி உதயநிதி முதல்வர் ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்று கூறியிருந்தார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

மேலும், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற திமுக கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

உதயநிதி அறிக்கை

அந்த அறிக்கையில், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

தர்மசங்கடம் வேண்டாம்

எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போது கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்று உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் தான் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Related posts