மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.
முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக சார்பில், முக்தார் அப்பாஸ் நக்வி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது நபிகள் குறித்து, பாஜக நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியை, குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் அமர வைக்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

