ஜ.நா அமைதிப்படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கமாண்டர் மோகன் சுப்பிரமணியன்
தெற்கு சூடானில் ஜனநாயக அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்த்தியுள்ளார் . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப்படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. தனது முத்திரிந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தெற்கு சூடானில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க சுப்பிரமணியன் பணியாற்றுவார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

