சென்னை: கடந்த வாரம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது ஆசாணி புயல். பின்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கடந்த 8ம் தேதி புயலாக வழுபெற்றது. புயலுக்கு ஆசாணி என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆசாணி புயல்
இந்நிலையில் தீவிர புயலாக உருமாறியுள்ள ஆசாணி புயல், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இது இன்று இரவு வடக்கு ஆந்திரா ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் என்றும் எதிர்ப்பர்க்கபடுகிறது. இதனால் ஒடிசாவில் ஒரு சில மாவட்டகளில் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்கம்பாக்கம், ஆலந்தூர், போரூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமாக மழை பெய்து வருகிறது. மற்றும் , பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
இதனையடுத்து வங்க கடலில் உருவான ஆசாணி புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டகளில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விமானகள் ரத்து
ஆசாணி புயல் உருவாகியுள்ளதால் வானம் தெளிவாக இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலயத்தில் இருந்து இயக்கபடும் 10 விமானகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதனால் முன்பதிவு செய்துள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.