இந்தியாஉலகம்

இரண்டாவது முறை புலிட்சர் விருது பெரும் புகைப்பட பத்திரிக்கையாளர்!

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரும், தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டவருமான டேனிஷ் சித்திக்குக்கு இரண்டாவது புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த புகைப்பட பத்திரிகையாளர்

புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சிறந்த புகைப்படம் எடுப்பதில் பெயர் பெற்றவர். 2020 ஆம் ஆண்டே புலிட்சர் விருது பெற்றார். டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த கலவரம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் என பலவிதமான புகைப்படங்களை எடுத்து உலகை அதிரவைத்த சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார்.

டேனிஷ் படுகொலை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். டெல்லியை புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ், அங்கு நிலவிய பெரும் பதற்றத்தை புகைப்படம் எடுக்க சென்று இருந்தார். அப்போது அவர் தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவரது மரணம் குறித்து பல செய்திகள் வெளியாயின.

படுகொலையின் பின்னணி

டேனிஷ் தாலிபான்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்தார் எனவும், இவரது உடல் அடையாளம் தெரியாதவாறு சிதைக்கப்பட்டது எனவும் உளவுத்தகவல்கள் மற்றும் பிரேத பரிசோதனையின் போது கூறப்பட்டன. டேனிஷின் படுகொலையை தொடர்ந்து இவரது குடும்பத்தினர் நீதி கேட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் தலிபான்கள் டேனிஷ் மரணம் குறித்த தகவல்களை மறுத்தனர்.

புலிட்சர் விருது

புலிட்சர் விருதுகள் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விருதாகும். இதழியல் துறையில் பிரேக்கிங் நியூஸ் செய்திகள், புலனாய்வு செய்திகள், சர்வதேச செய்திகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இரண்டாம் முறை

கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் காட்சிகளை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக டேனிஷ் சித்திக்குக்கு இந்த இரண்டாவது புலிட்சர் விருது வழங்கப்படுகிறது.