Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும்: உச்ச நீதிமன்றம்

இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும்: உச்ச நீதிமன்றம்

March 24, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினரான இருக்க முடியும் என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.

சாதி ரீதியாக பாகுபாடு காட்டிய, துன்புறுத்திய நபர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பாதிரியார் ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தனது தீர்ப்பை அளித்தது.

அந்த தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் மனுதாரர் கிறிஸ்தவத்தில் இருந்து தனது உண்மையான மதத்துக்கு மீண்டும் மதம் மாறியதாகவோ அல்லது மடிகா சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ வாதிடவில்லை. மேல்முறையீட்டாளர் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் ஞாயிறுதோறும் பிரார்த்தனைகளை நடத்தி ஒரு போதகராகச் செயல்பட்டு வருகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  நாட்டுமக்களின் நம்பிக்கையும், ஆதரவு எனக்கு வலிமை அளிக்கும் - திரௌபதி முர்மு !

குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மைகள், சம்பவம் நடந்த தேதியில் அவர் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்கவில்லை.

இந்து, சீக்கிய, பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எந்த ஒரு நபரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார். வேறு ஏதேனும் ஒரு மதத்துக்கு மாறுவது பட்டியல் சமூக அடையாளத்தை இழக்க வழிவகுக்கும். வேறு மதத்துக்கு மாறிய ஒரு நபர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர தகுதியற்றவர்’’ என உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணி:

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தடா ஆனந்த் என்ற பாதிரியார், தனது கிராமத்தில் ஞாயிறுதோறும் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சில நபர்கள் தன்னை தாக்கியதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிக்க :  ‘ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாக். பொய் பிரச்சாரம்’ - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா பதிலடி

சிந்தடா ஆனந்த்தின் மனுவை விசாரித்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஹரிநாத், ‘‘புகார்தாரர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் மூலம் அவர் தனது பட்டியல் சமூக அடையாளத்தை இழந்துவிட்டார். எனவே, எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பைக் கோர அவருக்கு உரிமை இல்லை’’ என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சிந்தடா ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?
Next Article “சாத்தியமான அனைத்து வழிகளிலும் எரிபொருள் பெற முயற்சி” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி தகவல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.