இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சியாக கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் சிறப்பு கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராஜபக்சே தான் பதவி விலகுவது மட்டும் தான் எல்லா பிரச்சனைக்கு தீர்வு என்றால் அதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் பதவி ஏற்க எதிர்க்கட்சி தலைவரான சஜித் பெரேமதாசாவுக்கு ராஜபக்சே அழைப்புவிடுத்துள்ளார். அத்தோடு தனது பதைவியை ராஜினாமா செய்தார்.
போராட்டக்காரர்கள் தீவைப்பு
இந்நிலையில், போராட்டக்காரர்கள் ராஜபக்சே பூர்விக வீடான அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுலனா இல்லத்தை போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் மெதமுலனா இல்லம் முழுவதுமாக தீவைக்கப்பட் டது . இதேபோல் ராஜபக்சே அருங்காட்சியகமமும் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு
போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய ஆளும் கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்கோரல அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆளும்கட்சி அரசியல்வாதிகள், மேயர் வீடுகள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கபட்டது. ஆளும் கட்சியை சார்ந்த சில அமைச்சர்கள் வீடும் தீக்கிரையாக்கபட்டது. தொடர் வன்முறையால் கொழும்புவில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோபத்துக்கு அஞ்சி சில முக்கியமான அரசியல் தலைவர்கள் பாதுகாப்பான இடைத்தை தேடி செல்கின்றனர்.
ராஜபக்சே தப்பியோட்டம்
நாட்டில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று இலங்கை பார்கவுன்சில் கேட்டு கொண்டுள்ளது. மக்களின் கோபம் அடங்காத நிலையில் ராஜபக்சே குடும்பத்தோடு நாட்டை வீட்டு தப்பியோட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராஜபக்சேவின் இரண்டாவது மகன் நமல் ராஜபக்சே தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
தற்போது, ராஜபக்சேவின் ஆட்சிக்காலமான 2009 ஈழ போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படத்தை உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு கூர்ந்து தற்போது ராஜபக்சே வீடு தீவைக்கப்பட்டுள்ளதை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கருக்களையும் எழுதி வருகின்றனர்.