அரசியல்சினிமா

ரஜினிகாந்த் சமூதாய பொறுப்பாளர் – அன்புமணி ராமதாஸ்!

பாபா படம்

அண்ணாமலை, பாட்ஷா படங்களை தொடர்ந்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுத, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும், இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனிடையே ‘பாபா’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அன்புமணி

இந்நிலையில், பாபா திரைப்படம் மீண்டும் வெளியாவதை குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ‘பாபா படத்தில் மட்டும்தான் புகை மற்றும் மது அருந்தும் காட்சிகள் இருக்கிறதா? மற்றவை எல்லாம் புத்தர் படங்களா? மேலும், ரஜினிகாந்த் ஒரு சமூதாய பொறுப்பாளர்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts