சினிமாவெள்ளித்திரை

கோலாகலமாக நடைபெற்ற தளபதி 67 பட பூஜை!

தளபதி 67

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. ‘தீ தளபதி’ என்ற இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர், விகரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என கூறப்பட்டது. மேலும், இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘தளபதி 67’ படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று காலை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

Related posts