சினிமாவெள்ளித்திரை

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு!

ஃபர்ஸ் சிங்கள்

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய காதபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது படபிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வரும் 9 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்காது.

Related posts