சினிமாவெள்ளித்திரை

வெளியானது கீர்த்தி சுரேஷ் பட போஸ்டர்!

போஸ்டர்

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும், தெலுங்கில் ‘தசரா’ படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ரகு தாத்தா’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts