சினிமாமருத்துவம்

பிரபல ஹிந்தி நடிகை மருத்துவமனையில் அனுமதி!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.

மருத்துவமனையில் அனுமதி

இவர் தற்போது ஷாரூக்கானுடன் ஜவான் படத்திலும், ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் பைட்டர் படத்திலும் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதனிடையே திடீரென நேற்று உடல்நல குறைவு காரணமாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்பு தீபிகா படுகோனே உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது தீபிகாவுக்கு இதய துடிப்பு அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts