நடிகர் விஜய்க்கு பிறகு குழந்தைகளை அதிகமாக கவர்ந்த நடிகர் என்று பெயர் பெற்றவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு மெரினா திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் தன் வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்
1985ல் திருச்சியில் பிறந்த நடிகர் சிவகார்த்திகேயன் ஜெ.ஜெ கல்லூரியில் பொறியியல் படித்தார். அதன்பிறகு சென்னையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்குப்பெற்றார். அதில் பிரபலமான இவர் தொடர்ந்து அதே தொலைக்கட்சியில் பணியாற்றினார். தனது நகைச்சுவை திறமையால் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்கினர்.
சினிமா என்ட்ரி
இதனையடுத்து 2012ம் ஆண்டு மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த 3 படம், மனம் கொத்தி பறவை போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதன்பிறகு 2013ம் ஆண்டு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அங்கிருந்து தமிழ் திரையுலகில் தனது வெற்றி பயணத்தையும் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
வெற்றி பயணம்
இவர் நடித்து வெளியான எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு 2014ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்த படம் மிக பெரிய வசூல் சாதனையை படைத்தது. மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அதிக பட்ஜெட் திரைப்படம் இது தான்.
வசூல் சாதனை
அதன்பிறகு வெளியான சீமாராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். அதனைதொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது.
டான்
இதனைதொடர்ந்து இவர் நடிப்பில் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி ஆகியோர் நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் ‘டான்’. திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது. இந்நிலையில் படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனகளை பெற்று வருகிறது.