வணிகம்

மீஷோவின் business model எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது தெரியுமா ?

இந்தியாவைச் சேர்ந்த Meesho எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் விதித் ஆட்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் எனும் இரண்டு டெல்லி ஐஐடி மாணவர்களால் துவங்கப்பட்டது.

உற்பத்தியாளர் (Suppliers) மற்றும் வாடிக்கையாளர்களை (customers) சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இணைக்கின்ற பாலமாக இந்நிறுவனம் செயல்படுகிறது. மேலும் இதில் மூன்றாவதாக மறு விற்பனையாளர் (re seller) என்ற ஒரு வசதியும் இருக்கிறது.

உங்களில் சிலருக்கு Meesho பரிட்சயமான நிறுவனமாக இருக்கலாம் அல்லது நீங்கள் “வீட்டிலிருந்தே மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்” என்பது போன்ற விளம்பரத்தைக்கூட கண்டிருக்கலாம்.

Reseller இன் பணி என்னவெனில், Meesho வில் விற்பனைக்கு வருகின்ற பொருள்களை உங்களது WhatsApp Group அல்லது Facebook Friends என உங்களது அறிமுகம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கலாம் (Share).

எப்படி சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவற்றை நம் வீட்டிற்கு கொண்டுவந்து இது நன்றாக இருக்கும் என விளம்பரப்படுத்துவார்களே அப்படி நாமும் செய்திட வேண்டும்.

மீஷோவின் வணிக மாடல்

நாம் share செய்த போஸ்ட்களின் மூலமாக நாம் பரிந்துரைத்தவர்கள் வாங்கினால் நமக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். அதேபோல வாராந்திர போனஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இப்படித்தான் இந்நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்திற்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்கிறீர்களா? விற்பனையாகும் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் (suppliers) 15% அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகை என குறிப்பிட்ட தொகையினை Meesho நிறுவனத்திற்கு அளிக்கவேண்டும்.

எப்படி Uber Eats, Zomato உள்ளிட்ட நிறுவனங்கள் ஹோட்டல் மற்றும் வாடிக்கையாளர் இருவரையும் இணைக்கின்றனவோ அதனைப்போலவே தான் Meesho வும் செயல்படுகிறது.

இடையில் re sellers என்ற ஒன்றினை கொண்டுவந்து பொருள்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்கிறது.

Facebook ன் முதலீடு

சிறு சிறு வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்களது பொருள்களை தங்களுக்கு நெருக்கமானவர்களிடத்தில் கொண்டு சேர்த்து விற்பனையை ஊக்குவித்து அதன் மூலமாக வளர்ச்சி பெற உதவி வருகிறது.

இந்த சூழலில் meesho வும் இதுபோன்றதொரு பணியினை செய்து வருவதனாலும் 80% பெண்களை கொண்ட 2 மில்லியன் re sellers ஐ கொண்டிருப்பதனாலும் Facebook இன் கவனத்தை இந்த நிறுவனம் பெற்று இருக்கிறது.

Facebook இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தாலும் கட்டுப்பாடு என்னவோ இன்னும் meesho நிறுவனத்திடம் தான் இருக்கிறது.

Facebook , Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாக சிறு சிறு தொழில்முனைவோர்கள் தங்களது பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துவருகின்றனர்.

இந்த சூழலில் வருங்கால விற்பனையாகமாக WhatsApp விளங்கிடும் என்பது பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருக்கிறது. Facebook இன் முதலீட்டை பெற்று இருப்பதனால் இன்னும் பல முதலீடுகளை பெற்று பெரிய வளர்ச்சியினை Meesho எட்டும் என எதிர்பார்க்கலாம்.

Related posts