அரசியல்தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் மீது அமைச்சர் கே என் நேரு அதிருப்தி – அதிர்ச்சியில் திமுக !

முதல்வர் ஸ்டாலின் மீது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அதிருப்தியில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சி

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதனையடுத்து, தமிழக முதலமைச்சராக, முதல் முறையாக கடந்த ஆண்டு மே 7ம் தேதி அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார், அதனை தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றது.
அப்போது, உள்ளாட்சி துறையை நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை என பிரிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பெரிய கருப்பன் நியமிக்கப்பட்டார்.

1 Year Of CM Stalin : திமுக ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு: சவால்களை சமாளித்ததா நிதித்துறை..?

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி உறுப்பினரும், தமிழக முதலமைச்சர் மகனுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்கும் பணி முழு வீச்சியில் நடைபெற்று வருகின்றன.

இலாகா மாற்றம்

அவருக்கு, உள்ளாட்சித் துறை இலாகாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை உள்ளாட்சித் துறை என ஒருங்கிணைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கே.என்.நேரு, பெரிய கருப்பன் ஆகியோருக்கு புதிய துறைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கே என் நேரு அதிருப்தி

நகர்ப்புற வளர்ச்சி துறை தன் கைவிட்டு போவதால் கே.என்.நேரு முதல்வர் ஸ்டாலின் மீது அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய மண்டலத்தில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இருவரும் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், மூன்றாவதாக எஸ்.எஸ்.சிவசங்கரும் வந்ததால், மன வருத்தத்தில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு தற்போது, இந்த விவகாரத்தால் பெரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts