கல்விசினிமா

ஹரி வைரவன் குழந்தையின் படிப்பு செலவை ஏற்கும் விஷ்ணு விஷால்!

படிப்பு செலவு 

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஹரி வைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தையின் படிப்பு செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நடிகரும், ஹரி வைரவனின் நண்பனுமான விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஹரி வைரவனின் மனைவியிடம் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

Related posts