இந்தியா

மசூதிகளில் ஒளிக்கும் நாக்குக்கு எதிராக கோவில்களில் பக்தி பாடல்கள்

கர்நாடகாவில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய ஹிஜாப் விவகாரம், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர, கர்நாடக அரசு தடை விதித்தது. அந்தத் தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், ‘இஸ்லாமியச் சட்டப்படி ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்பதால், கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’ என்று தீர்ப்பளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், சுமார் 21,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனால் மீண்டும் மாநிலம் முழுவதும் பரபரக்கத் தொடங்கியது ஹிஜாப் விவகாரம். இந்த ஹிஜாப் விவகாரம் அடங்குவதற்குள்ளாக அடுத்தடுத்த மதப் பிரச்னைகள் கர்நாடகாவில் தலை தூக்கியிருக்கின்றன.

இஸ்லாமியர்களின் ஐந்து வேளை தொழுகைக்காக மசூதிகளில் ‘அஸான்’ எனும் பாங்கு முழக்கம் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும். இந்த பாங்கு ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவதற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்துவருகின்றனர்.

மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பிய நிலையில், அதை பின்பற்றி ஸ்ரீ ராம் சேனா அமைப்பினரும் கர்நாடகாவில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் ஒலிபெருக்கியில் பாங்கு ஒலிக்கச் செய்வதற்கு போட்டியாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு, மைசூரு, ஹுப்ளி, மங்களூரு, உடுப்பி உட்பட மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் பக்திப் பாடல்கள், சுப்ரபாதம், வழிபாட்டு பாடல்களை ஒலிபரப்பினர். மைசூருவில் உள்ள ஜெய ஆஞ்சநேயா கோயிலில் நடைபெற்ற பஜனையில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பங்கேற்றார்.

கோவில்களில் அதீத சத்தத்துடன் பக்தி பாடல்கள் ஒளிபரப்ப பட்டதால் அங்கு கூட்டம் கூடியது‌, இதனால் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உட்பட பலரை போலிசார் கைது செய்தனர்.

Related posts