அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் பாஜக இன்று உண்ணாவிரத போராட்டம் !

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

 பாஜக உண்ணாவிரத போராட்டம்

சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக வடசென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகிய 7 பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு பாஜக தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

Related posts