சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை !

சாத்தூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(26). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், காயத்ரியின் மகனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக தெரிந்தவர்களிடம் கடன் பெற்று மகனுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும், இதுகுறித்து கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

sattur

மருத்துவமனை

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காயத்ரியின் தந்தை குணசேகர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts