மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுவால் தற்கொலை
திருவள்ளூரை அருகே உள்ள போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் லோகேஷ்குமார்(42). இவருக்கு கல்பனா(40) என்ற மனைவியும், கவின் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக லோகேஷ் குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக லோகேஷ் குமார்க்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னுடைய கணவனிடம் கோபித்துக்கொண்டு கல்பனா தாய் வீடான வந்தவாசிக்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனாக்கு மணவாளநகர் காவல் நிலைய போலீசார் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து லோகேஷ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

