தமிழ்நாடு

தஞ்சை ‘ராணி பேரடைஸ்’ தியேட்டர் ஓனர் குமார் வீட்டில் வருமானவரி துறை ரெய்டு !

தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர், குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை ரெய்டு

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார்.  இவருக்கு சொந்தமாக  ‘ராணி பேரடைஸ் தியேட்டர்’ நடத்திவருகிறார். தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணி பேரடைஸ் தியேட்டர் உள்ளது. இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது..

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக, குமார் மீது புகார் கிளம்பி உள்ளது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 16 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு குமாருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள், தியேட்டர், அவரது வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் கசிந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. தஞ்சையில் ஒரே நேரத்தில் இந்த 4 இடங்களிலும் ரெய்டு நடந்துள்ளது  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts