ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விலை உயர்வு
மத்திய அரசு உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதன்காரணமாக ஆவின் தயிர், நெய் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். இதன்பெயரில் 100 கிராம் ஆவின் தயிர் விலை 12 ரூபாயாகவும், 200 கிராம் ஆவின் தயிர் விலை 28 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அரை லிட்டர் தயிர் 35 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது என்பது கூறிப்பிடத்தக்கது.

