ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக ஏற்றுக்கொள்ள கூடாது என ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி பிரபாகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பாராளுமன்ற அதிமுக உறுப்பினராக இருக்கும் ரவீந்திரநாத் எம்.பியை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடிதத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படயுள்ளதாகவும், ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறியுள்ளார். அதனுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விபரங்களையும் இணைத்து அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார். இது சபாநாயகர் ஓம் பிர்லா எடுக்கும் முடிவை பொறுத்தது. இதற்கு பதில் கடிதம் ரவீந்திரநாத் சார்பில் எழுதபடயுள்ளதாகவும் கூறபடுகிறது.

