சினிமாவெள்ளித்திரை

கோப்ரா பட காட்சிகள் நீக்கம் – படக்குழு அதிரடி !

கோப்ரா படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கோப்ரா படம் 

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. கதாநாயகனாக விக்ரம் நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

காட்சிகள் நீக்கம்

கோப்ரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நேற்று படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறினார்கள். இதனால் கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்பெயரில் நீளம் குறைக்கப்பட்ட திரைப்படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts