தமிழ்நாடுமருத்துவம்

மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாதம் ஒரு மெகா சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாம்

இந்நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறும்போது, ‘பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் 3½ கோடி பேர் இருக்கிறார்கள். இந்த மாதம் வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அந்தவகையில் வருகிற 4-ம் தேதி மெகா சிறப்பு முகாம் மீண்டும் நடைபெறுகிறது. எனவே மக்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களும் தங்கள் பகுதியில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts