சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கூறியிருந்தது.
கனமழை
இந்நிலையில், சென்னையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அசோக் நகர், தி.நகர், கோடம்பாக்கம்,கோயம்பேடு, வடபழனி, எம்.எம்.டி.ஏ, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் மழை பெய்துவருகிறது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், கோவிலம்பாக்கம் போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

