அரசியல்தமிழ்நாடு

விருதுநகரில் 500 பாஜக பிரமுகர்கள் கைது !

விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் உட்பட 500 பேர் கைது செய்துள்ளனர்.

பாஜகவினர் கைது

விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி பாதயாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் 500 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட முழுவதும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாதயாத்திரை சென்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

ஆனால் பாதயாத்திரை செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பாதயாத்திரை நிகழ்ச்சி தொடங்கி வைப்பதற்காக சிவகாசி சிவன் கோவில் பகுதி அருகே திரண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தொண்டர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பாதயாத்திரை தொடங்க இருந்த பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts