சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
சென்னை ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மையத்தில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 30 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, ப்ளஸ் 2, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் பயின்ற அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

