Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»ஆசனங்களின் அரசனான சிரசாசனம்! – சில குறிப்புகள்

ஆசனங்களின் அரசனான சிரசாசனம்! – சில குறிப்புகள்

May 23, 20223 Mins Read946 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புவியீர்ப்பு ஆற்றலுக்கு எதிரான நிலையில் செய்யப்படும் சிரசாசனம் அற்புதமான பலன்களை அளிக்கக் கூடியது.

மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன்களில் சில.

பெரும்பாலான யோகப்பயிற்சியாளர்களுக்கு சிரசாசனம் பயில்வதன் மூலமே ஆசனப் பயிற்சி முழுமையடைகிறது.

சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள் :

மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது
முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது
ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது
நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
ஆழ்ந்து சுவாசிக்க உதவுகிறது


இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது
வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
சீரணத்தைப் பலப்படுத்துகிறது
இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது
மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது
உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது
ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது
தூக்கமின்மையைப் போக்குகிறது
கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
கால்களை பலப்படுத்துகிறது; கால் வீக்கத்தைப் போக்குகிறது
வெரிகோஸ் வெயின் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது
கூந்தல் நலனைப் பாதுகாக்கிறது; நரைமுடி தோன்றுவதை ஒத்திப் போடுகிறது
கவனத்தைக் கூர்மையாக்குகிறது
சிந்தனையில் தெளிவை அதிகரிக்கிறது
நினைவாற்றலை மேம்படுத்துகிறது
மன அழுத்தத்தைப் போக்குகிறது
மன அமைதியை வளர்க்கிறது

இதையும் படிக்க :  வயிறு மற்றும் குடல்பகுதியை பலப்படுத்தும் புஜங்காசனம்!
செய்முறை

தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும்.

இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.
மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.
மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும்.

இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.

மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். பின் இரண்டு கால்களையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.

இதையும் படிக்க :  குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 'சூப்பர் ஃபுட்ஸ்' கொடுங்க!

துவக்கத்தில் சில வினாடிகள் இந்நிலையில் இருந்தால் போதுமானது. நாளடைவில் பயிலும் நேரத்தை அதிகரித்து சுமார் மூன்று முதல் அய்ந்து நிமிடங்கள் வரை சிரசாசனத்தில் இருக்கலாம். வருடக் கணக்காக தொடர்ந்து யோகா பயின்று வரும் தேர்ந்த யோகப்பயிற்சியாளர்கள் மட்டும் 30 நிமிடங்கள் வரை இவ்வாசனத்தில் இருக்கலாம்.

ஆசன நிலையிலிருந்து வெளிவர மெதுவாக வலது காலை மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வந்து பின் இடது காலை வலது கால் அருகே கொண்டு வரவும். பின் வலது காலைத் தரையில் வைக்கவும்.

பின் இடது காலை வலது கால் அருகே வைக்கவும்.

மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி பாலாசனத்தில் சில வினாடிகள் ஓய்வெடுக்கவும்.

குறிப்பு

ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களும் அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.

தலைக்குக் கீழ் மடித்த விரிப்பொன்றை வைத்துப் பழகவும். துவக்கத்தில் முதுகு சுவற்றை ஒட்டி இருக்குமாறு வைத்து இவ்வாசனத்தனைப் பழகலாம். ஆனாலும், சுவற்றின் மீது உடல் எடை இருக்குமாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம், இருதய கோளாறு, கண் அழுத்த நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சிரசாசனம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

featured Fitness Health sirasasanam yoga
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகுண்டு துளைக்காத கார்களுக்கு பின் இருக்கும் அறிவியல்!
Next Article லிங்கன் – கென்னடி ஆச்சர்யமூட்டும் பொருத்தங்கள் !

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.