அறிவியல்

குண்டு துளைக்காத கார்களுக்கு பின் இருக்கும் அறிவியல்!

தீவிரவாதிகளால் ஆபத்து என்று கருதப்படுகிற உலகத் தலைவர்களுக்காக குண்டு துளைக்க முடியாத கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை எப்படி அந்தத் தலைவர்களைப் பாதுகாக்கின்றன என்பது தெரியுமா?

இந்தக் கார்களின் கண்ணாடிகள் ‘கெவ்லார்’ எனப்படும் ரசாயனப் பொருள் கலந்து கனமாக தயாரிக்கப்படுகின்றன.

இந்தக் கண்ணாடியின் மேல் குண்டு படும்போது அதன் வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு போய் ஏதாவது ஒரு பக்கம் விழுந்துவிடும்.

இந்தக் கண்ணாடியைத் தவிர காரில் பயணிகள் உட்காரும் இடத்தைச் சுற்றிலும் 10 மில்லிமீட்டர் கனத்துக்கு இரும்புத் தகடுகளும் வைக்கப்படும். இந்த இரும்புத் தகடுகளும் துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது.

அதே போல் யாராவது காரைப் பின் தொடர்ந்து வந்தால் காரை மறைக்கும் வித்த்தில் வெண்மையான புகை மண்டலத்தை எழுப்பி எதிரிகளை குழப்பிவிடும் வசதியும் இதில் உள்ளது.

குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது இத்தாலிய நாடு. வருஷத்துக்கு 2000 கார்கள் வரை தயாரிக்கிறது.

குண்டு துளைக்காத காரின் எடை சாதாரண காரின் எடையைக் காட்டிலும் 500 கிலோ அதிகம்; விலையோ நான்கு மடங்கு அதிகம்.

Related posts