இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்பெயரில் கடந்த 6ம் தேதி 4,417 ஆக இருந்த பாதிப்பானது தற்போது 4,369 ஆக குறைந்துள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 364 ஆக உள்ளது.
நேற்று மட்டும் 5,178 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்றுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது.

