தமிழ்நாடுவணிகம்

தொடர் கனமழை எதிரொலி : காய்கறி விலை உயர்வு !

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

விலை உயர்வு

இதன்காரணமாக காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை, கோயம்பேடு சந்தைக்கு தினசரி 480-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் தொடர் மழையின் காரணமாக இன்று 360 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளின் விலையானது 2 மடங்காக உயர்ந்துள்ளது.

Related posts