கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம்.
மாணவர்கள் போராட்டம்
இலங்கை, தலைநகர் கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை கோரி மாணவர்கள் சங்கத்தினரால் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் ‘ரணில் – ராஜபக்சே அரசை விரட்டியடிப்போம்’ என பாதகையை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் போராட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதன் காரணமாக இலங்கையில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், போராட்ட ஏற்பாட்டாளர் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

