வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 4 நாட்கள் கொங்குமண்டலம் சுற்றுப்பயணம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சுற்றுப்பயணம்
வரும் 23-ம் தேதி மாலை விமானம் மூலம் கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். அதனைத்தொடர்ந்து மறுநாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின். அங்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அவர் பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி சென்று அங்கு நடைபெறவிருக்கும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
கொங்குமண்டலம்
அதனையடுத்து அன்று மாலை கார் மூலம் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின். மேலும், 26-ம் தேதி காலை ஈரோட்டில் நடக்கும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். பின்னர் கார் மூலம் கோவையில் உள்ள தனியார் கல்லூரி பவள விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பங்கேற்கிறார். விழா முடிந்த பின்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் மு.க.ஸ்டாலின்.

