கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “கரூரில் நடந்துள்ள துயரமான சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. குழந்தைகள் உயிரிழந்திருப்பது துயரமான சம்பவம்.
இந்தச் சம்பவத்தை உச்சநீதிமன்ற அமர்வு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக யாரையும் குறை சொல்ல முடியாது.
தீர விசாரிக்க வேண்டும். அதனால் தான் நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறோம்.” என்று தெரிவித்தார்.

