காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி
இங்கிலாந்தின் முக்கிய நகரமான பர்மிங்காமில், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா வீரர்கள் இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. மகளிர் ஜூடோ 48 கிலோவிற்க்கான எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்றுள்ளார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளதாக என கூறப்படுகிறது.

