நடிகர் சல்மான் கான் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
துப்பாக்கி உரிமம்
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் கடிதம் வாயிலாக மர்ம நபர் ஒருவரால் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து சல்மான் கான் இது குறித்து பாந்திரா காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். இதன்பெயரில் அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நடிகர் சல்மான் கான் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க கூறி மும்பை காவல் துறையிடம் விண்ணபித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

