குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளன.
சாலையோர அருவி
நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதிகளுக்கு நடுவே மலையை குடைந்து அமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் இயற்கை காட்சிகள் நிறைந்து காணப்படும். முக்கியமாக நீலகிரியில் கோடை காலத்தில் வறண்டும், மழைக்காலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் காணப்படும். இந்நிலையில், இதை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மேலும், குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள சிறிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றாலநாட்களை கொண்டாடி வருகின்றனர்.

