திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் சோதனை
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 1,500க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலை இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உட்பட பல்வேறு இடங்களில் மாநகர காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 3 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 150 காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

