தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிய ரேஷன் கடையின் விநியோக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடை
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக விடுதலை தின அமுதப்பெருவிழா என்ற தலைப்பில், மத்திய அரசு பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 20 கோடி வீடுகளில் தேசிய கொடியை பறக்கவி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்தில் 20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அந்த ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் கூறிய வீடியோ ஒன்றை பாஜக எம்.பி.வருண் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த கடையின் ரேஷன் விநியோக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
आजादी की 75वीं वर्षगाँठ का उत्सव गरीबों पर ही बोझ बन जाए तो दुर्भाग्यपूर्ण होगा।
राशनकार्ड धारकों को या तिरंगा खरीदने पर मजबूर किया जा रहा है या उसके बदले उनके हिस्से का राशन काटा जा रहा है।
हर भारतीय के हृदय में बसने वाले तिरंगे की कीमत गरीब का निवाला छीन कर वसूलना शर्मनाक है। pic.twitter.com/pYKZCfGaCV
— Varun Gandhi (@varungandhi80) August 10, 2022

