சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது.
தடம்புரண்ட ரயில்
சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு காலை 3 மணிக்கு யார்டில் இருந்து 6 பெட்டிகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து ரெயில் நடைமேடை 3னில் வந்து நின்றது. அப்போது, அந்த ரெயில் திடீரென பின்னோக்கி நகர்ந்தது. இதில் ரெயிலின் கடைசி பெட்ட தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதில் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை.பின்னர், கடைசியில் இருந்த 3 பெட்டிகளையும் சரி செய்து 3.50 மணிக்கு மீண்டும் தண்டவாளத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

