தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு வெளிநாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதன் துவக்க விழா கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதேபோல் இதன் நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பேச்சு
வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை பாராட்டி வருகிறார்கள். இதனால் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்’ என்று கூறினார்.

