ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் 20 கிலோ வரையில் அரியவகை மஞ்சள் கிளி மீன்கள் சிக்கியுள்ளது.
கிளி மீன்கள்
பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் 20 கிலோ வரையியில் மஞ்சள் கிளி மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மஞ்சள் கிளி மீனானது கிளிஞ்சான் மீன் வகையைச் சார்ந்தவை. இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும், கடலில் பிடிக்கும் போது உயிருடன் இருக்கும் மீன்களைப் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்ப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் அதிகளவில் வாழ்கின்றன.
மஞ்சள் கிளி மீன்கள் அதிகபட்சமாக 20 செ.மீ நீளம் முதல் 8 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது, உலகத்தில் உள்ள ஏழு பெருங்கடலில் 600 வகை கிளிஞ்சான் மீன்கள் இருப்பதாக கூறுகின்றனர், மீன்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. அதில் இந்தியாவில் மட்டும் 12 வகை கண்டறியப்பட்டுள்ளன. பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இதன் விலை கிலோவுக்கு 80 முதல் 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றனர்.

